அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்

ஊர் -திருவிடந்தை

மாவட்டம் -காஞ்சிபுரம்

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் – நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமி வராகப்பெருமாள்

தாயார் -கோமளவல்லித்தாயார்

தல விருட்சம் – புன்னை, ஆனை

தீர்த்தம்– வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம்

திருவிழா -வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம் -காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை

தல வரலாறு ;

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 63 வது திவ்ய தேசம் ஆகும். திரேதாயுகத்தில் பலி என்ற அரசன் நல்லாட்சி புரிந்து வந்தான். அப்போது மாலி, மால்யவான், ஸுமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் போர் புரிய பலியின் உதவியை நாடினர், அவன் மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் தனியாக போரிட்டு தோற்றனர்.

பின் மீண்டும் பலியிடம் உதவி கேட்கவே அவர்களுடன் சண்டையிட்டு வென்றார் பலி. இதனால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் விலக இத்தலத்தில் தவம் புரியவே, பெருமாள் தவத்திற்கு மெச்சி வராக ரூபத்தில் காட்சி கொடுத்து தோஷம் போக்கினார்.

குனி என்ற முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்ல தவம் இருந்தனர். குனி மட்டும் சொர்க்கம் சென்றார். அவரது மகள் சொர்க்கம் செல்லாமல் நின்ற வேளையில் நாரதர் வந்து ‘நீ’ திருமணம் அகாதவள் எனவே உன்னால் சொர்க்கம் செல்ல முடியாது, என சொல்லி அங்கிருந்து முனிவர்களிடம் அப்பெண்ணை திருமணம் செய்யும் படி வேண்டினார்.

அப்போது காலவரிஷி என்பவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு 360 பெண் குழந்தைகளைப் பெற்றார். தன் பெண்களை நாராயணரை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். எனவே பெருமாள், ஒரு பிரம்மச்சாரி இளைஞனாக வந்தார். திவ்ய தேச யாத்திரைக்காக வந்ததாக கூறினார். அந்த இளைஞனை பார்ப்பதற்கு தெய்விக அம்சத்துடன் இருக்கவே தன் பெண்களை திருமணம் செய்யும் படி வேண்டினர்.

அப்பெண்களை தினம் ஒரு பெண்ணாக மணமுடித்தார் கடைசி நாளில் அந்த இளைஞன் வராகமூர்த்தி வடிவில் வந்து நாராயணன் என தன் சுயரூபத்தைக் காட்டி 370 கன்னியர்களின் ஒன்றாக சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது இடது பக்கத்தில் வைத்துக்கொண்டு காட்சி கொடுத்தார்.

லட்சுமி இடப்புறம் ஏற்றுக் கொண்ட எம்பெருமான் என்பதால் இத்தலம் திருவிடந்தை எனப்பட்டது 360 கன்னியரை ஒரே பெண்ணாக செய்ததால் இங்குள்ள தாயாருக்கு அகில வல்லி நாச்சியார் எனப் பெயர் பெற்றார். 360 பெண்களின் முதல் கனியான கோமளவல்லி பெயரே இங்குள்ள தாயாருக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 108 திவ்யதேசங்கள் இத்தலத்துப் பெருமாள் ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

Recent Post