என்ன செஞ்சாலும் PIMPLES போகலையா? புடலங்காயை வச்சு இப்படி ட்ரை பண்ணுங்க…

பலருக்கும் அவ்வளவாக பிடிக்காத காய்கறிப் பட்டியலில் புடலங்காய் முன்னணியில் இருக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமில்லாமல் சருமத்தை மெருகேற்றுவதிலும் புடலங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

90% நீர்ச்சத்து நிறைந்துள்ள புடலங்காயை சாப்பிடுவதால் சருமம் நீரேற்றத்துடன் காணப்படும். இதனால், சரும வறட்சி இருப்பவர்கள் புடலங்காயை அவசியம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். செரிமான அமைப்பை சரி செய்யும் புடலங்காய், நச்சுக் கழிவுகளை வெளியேற்றி சருமத்திற்கு புதுப் பொலிவை வழங்கும் தன்மை கொண்டது. இதனால், முகத்தில் வரும் முகப்பரு, கரும்புள்ளி போன்ற பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

புடலங்காயில் விட்டமின் C மற்றும் சிங்க் சத்துக்கள் நிறைந்துள்ளதால், முகத்தில் சுருக்கங்கள் வருவது குறைவதோடு இளமையான தோற்றத்தையும் அளிக்கிறது. சரும ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவைப்படும் கொலாஜென் உற்பத்திக்கு புடலங்காய் உதவுவதால், அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது சிறப்பான பயன்களை தரும்.

புடலங்காயை அரைத்து facepack ஆக போட்டாலும் முகத்திற்கு குளிர்ச்சியான உணர்வை தரக் கூடியது. புடலங்காயை ஜூஸ், சாம்பார், பொரியல் என பலவகைகளில் சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Post

RELATED POST