நொய் உப்புமா செய்வது எப்படி?

தேவையான பொருள்:

பச்சரிசி1 கப்
துவரம் பருப்பு2 டீஸ்பூன்
மிளகு1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்4
உப்பு,எண்ணெய்தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்புதாளிக்க
பால்2டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்4 டீஸ்பூன்

செய்முறை: பச்சரிசியுடன் மிளகு சேர்த்து மிக்சியில் நொய் போல உடைக்கவும், துவரம்பருப்பை ஊற வைத்து நீரை வடிய விட்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் காய விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளித்து 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கும்போது அரிசி நொய், அரைத்த பருப்பு விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பின்பு தேங்காய்த்துருவல், பால் விட்டு கிளறி உப்புமா உதிரி உதிரியாக வந்த பின்பு இறக்கவும்.இறக்கிய பிறகு எலுமிச்சை சாறு பிழிந்தும் பறிமாறலாம்

Recent Post

RELATED POST