நரம்பு தளர்ச்சியை தடுக்கும் நூக்கல்

நூக்கல் சற்று கடினமாக இருக்கும் காயாகும். இதனை நூல்கோல் எனவும் நூற்கோல் எனவும் சொல்வதுண்டு. இதில் அதிக வைட்டமின் மற்றும் புரத சத்துக்களும் நிறைந்துள்ளது. நூக்கலை தினமும் உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்கோப்புடன் இருக்க முடியும். மேலும் நூக்கலில் உள்ள வைட்டமின் ஏ. சி, இ, மாங்கனீசு, பீட்டாகரோட்டின் ஆகியவை உடலுக்கு தேவையான புரத சத்துக்கள்.

நூக்கலில் உள்ள வைட்டமின் கே இதய பிரச்சனை வராமல் பாதுகாக்கிறது. நூக்கல் இலை உடலில் உள்ள கொழுப்பு மற்றும் பித்தநீர் ஆகியவை வெளியேற்றுகிறது. மேலும் கொலஸ்ட்ரால் குறைந்து இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

நூக்கல் மருத்துவ பயன்கள்

நூக்கல் வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தியை அதிகரித்து, செரிமானத்தை சீராக்கும். மேலும் வயிற்று பிரச்சனைகள், மற்றும் வயிற்றுப்புண்கள் உண்டாக்கக் கூடிய செல்களை எதிர்த்து அழிக்க கூடியது.

நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் குணமாக்கிறது. நூக்கல் கீரை வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால் நூரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது.

நூக்கல் வேர்ப்பகுதியில் உள்ள பீட்டா கரோட்டின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் ஆரோகியமான சவ்வுகள் உற்பத்தியை அதிகரிக்கிறது.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை நூக்கல் இரு மடங்காக அதிகரிக்கிறது. தினமும் நூக்கலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை தடுக்கும். மேலும் நூக்கலை சாப்பிடுவதால் குடல் நாளங்கள் உறுதிப்படும், எலும்புகள் உறுதியாகும்.

வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் நூக்கல் இலையை அரைத்து தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பிரச்சனை, மலச்சிக்கல் ஆகியவை குணமாகும். குழந்தை பெற்ற பெண்கள் நூக்கலை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

Recent Post