கோடைகாலம் வந்திருச்சு…நுங்கு சாப்பிடுங்க..இதுல பல நன்மைகள் இருக்கு..!

இயற்கை அளித்த வரப்பிரசாதங்களில் நுங்கும் அடங்கும். ரசாயனம் கலந்த குளிர்பானங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இயற்கை உணவுகளுக்கு கொடுப்பதில்லை. சாலையோரங்களில் விற்கப்படும் நுங்கில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. நுங்கை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இதில் பாப்போம்.

வெயில் காலத்தில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்குவதற்கு இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் நுங்கு. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.

நுங்கில் வைட்டமின் பி, வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், தயாமின், சோடியம், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

நுங்கு உடலிலுள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க செய்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவு கட்டுப்பாடுடன் நுங்கையும் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு நல்ல மருந்து. குடல் புண்ணை ஆற்றும் தன்மை நுங்கில் உள்ளது.

உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அந்த நேரத்தில் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும்.

ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய் இரண்டையும் தடுக்கக்கூடிய சக்தி நுங்கில் உள்ளது.

நுங்கில் இருந்து கிடைக்கும் பதநீர் உடல் உஷ்ணத்தைக் குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனால் கோடை காலத்தை எளிதாக சமாளிக்கலாம்.

கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிடுவதால் செரிமான மண்டலம் நன்றாக செயல்படும். மேலும் மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை தடுக்கும்.

Recent Post

RELATED POST