குளிர்காலத்தில் தலைமுடி வறண்டு போகாமல் இருக்க, முடிக்கு ஷாம்பூ பயன்படுத்தும் முன்பு எண்ணெய் தடவுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
குளிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு தலையில் எண்ணெய் வைக்க வேண்டும். இதனால் தலையின் முடி ஆரோக்கியமாக இருக்கும்.
அதிக அழுக்கு நிறைந்த தலையில் எண்ணெய் வைப்பது பொடுகுத் தொல்லை ஏற்படுத்தும். இதனால் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மாதம் இரண்டு முறை தலைக்கு ஹேர் ஆயில் மசாஜ் செய்தால் முடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் தலைமுடியை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது.