ஓமத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. அஜீரணக் கோளாறு உள்ளிட்ட வயிறு சம்பந்தமான நோய்களை குணமாக்கும். ஓமத்தை வைத்து உடல் எடையை வேகமாக குறைப்பது எப்படி என்பதை இதில் பார்ப்போம்.
ஓமம் தண்ணீர்
ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் 2 ஸ்பூன் அளவு ஓமத்தைச் சேர்த்து நன்கு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் நிறம் நன்கு மாறியதும் அடுப்பை அணைத்து விட்டு அதை ஆறவிடுங்கள். நன்கு ஆறியதும் வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிச் அதிகமாகி உடல் எடை வேகமாகக் குறையும். நீண்ட நாட்களாக தேங்கியிருக்கும் கடினமான கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றும்.
ஓமம் மற்றும் தேன்
ஓமத்தை போல தேனிலும் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் ஓமத்தைச் சேர்தது இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அதை வடிகட்டி, அதோடு ஒரு ஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் அடி வயிற்றில் தேங்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து வெளியேற்றும்.