மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிக முக்கியமானது. கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை போல ஆக்சிஜனின் அளவையும் அதிகரிக்க செய்வ வேண்டியது முக்கியம். அதற்கான இயற்கை வழிமுறைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கீழே கொடுக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சேர்த்து வந்தால் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க முடியும்.
ஆப்பிள்
ஆப்ரிகாட்
எலுமிச்சை
பேரிக்காய்
உலர் திராட்சை
கிவி
பப்பாளி
தர்பூசணி
சாத்துக்குடி
குடைமிளகாய்
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. எனவே வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். உடற்பயிற்சின்போது வாய்வழியாக மூச்சு விடுவதை தவிர்க்க வேண்டும். வாய்வழியாக சுவாசித்தால் ஆக்சிஜன் அளவு வேகமாக உடலில் இருந்து குறையும்.
போதுமான தண்ணீர் உடலுக்கு கிடைக்காதபோது உடல் இயக்கத்தில் மாறுபாடு ஏற்படும். உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.