பச்சை பயறில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, மெக்னீசியம், தாமிரம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை ஊறவைத்து சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
முளை கட்டிய பச்சைப் பயற்றில் அமினோ அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் அதிகளவில் நிறைந்திருக்கும். இவை உடலில் புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கும்.
முளை கட்டிய பச்சைப் பயறில் சோடியம் குறைவாக இருக்கும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வரலாம்.
செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு முளை கட்டிய பச்சைப் பயிறு உதவுகிறது. பச்சை பாசிப் பயிரில் கணிசமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
பச்சைப்பயறு எளிதில் செரிமானம் அடைவதால் இதை மதிய உணவாகவும், இரவு உணவாகவும் சேர்த்துக் கொள்ளலாம்.