முகக்கவசம் அணிந்தது போல பெயிண்ட் அடித்துக்கொண்ட பெண்கள்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலா சென்ற இரண்டு பெண்கள் முகக்கவசம் அணிந்து போல பெயிண்ட் அடித்துக் கொண்டு பிராங்க் வீடியோ செய்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

மாலத்தீவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு முகக் கவசம் அணியாமல் செல்கிறார்கள். அந்த கடையில் பாதுகாவலர் அவர்களே திருப்பி அனுப்புகிறார். உடனே அவர்கள் இருவரும் முகக்கவசம் அணிந்து போல பெயிண்ட் அடித்துக் கொண்டு மீண்டும் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகின்றனர். அங்கு நடந்த அனைத்து விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.

இந்த வீடியோ வைரலாகப் பரவியது அதன் பிறகு கடும் விமர்சனங்கள் கிளம்பியது. பொறுப்பற்ற அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இதனை அடுத்து பாலி தீவு அதிகாரிகள் அந்த பெண்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர்.

கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக சுற்றுலாப் பெண்கள் இருவருக்கும் இந்தோனேஷிய ரூபாயில் 1 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மற்றொரு வீடியோவில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ள அவர்கள், தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளனர்.