எந்த பாகத்தில் பல்லி விழுந்தாலும் முதலில், குளித்துவிட்டு, அருகிலுள்ள கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் அல்லது வீட்டிலேயே விளக்கேற்றி பிரார்த்தனை செய்வது அவசியமாகும்.
பல்லி தலையில் விழுந்தால், அவருக்கு வர இருக்கும் கெட்ட சகுணத்தை குறிக்கின்றது.
பல்லி மார்பு பகுதியில் விழுந்தால், ஆண், பெண் இருபாலருக்குமே நன்மை தான் விளையும்.
வலது மார்பின் மீது பல்லி விழுந்தால், லாபம் கிடைக்கப்பெறும் என்பார்கள். இதுவே இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு சுகம் கிடைக்கப்பெறுமாம்.
தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், பெற்றோருக்கு வருத்தம் ஏற்படும் செயலை செய்ய போகிறீர் என்று அர்த்தம்.
பாதத்தில் பல்லி விழுந்தால் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கட்டாயம் வந்துசேரும்.
கண்கள் அல்லது கன்னங்களின் மீது பல்லி விழுந்தால், ஏதோ ஒரு செயலுக்காக உங்களுக்கு தண்டனை கிடைக்க போகிறது என்று அர்த்தமாம்.
வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால், கெட்ட சகுணம். அதுவே இடது மணிக்கட்டில் என்றால் அதிர்ஷ்டம்.
நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் நன்மைகள் வரும். வலது நெற்றியில் விழுந்தால் பணவரவு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.