பாம்பணையப்பன் கோவில் வரலாறு

ஊர் – திருவண்வண்டூர்

மாவட்டம் -ஆலப்புழா

மாநிலம் – கேரளா

மூலவர் – பாம்பணையப்பன்

தாயார் – கமலவல்லி நாச்சியார்

தீர்த்தம் – பம்பை தீர்த்தம்

திருவிழா – மாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் கொடியேற்றம் செய்து 10 நாள் திருவிழா.

திறக்கும் நேரம் – அதிகாலை 4:30 மணி முதல் பகல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை .

தல வரலாறு ;

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 75 வது திவ்ய தேசம் ஆகும். பிரம்மனும் நாரதரும் ஒரு சமயம் பேசிக் கொண்ட போது வாக்குவாதம் உண்டாயிற்று. இதில் பிரம்மன், நாரதரை சபித்தார். எனவே நாரதர் இத்தல பெருமாளை நோக்கி தவம் புரிந்து சகல சிருஷ்டிகளையும் பற்றிய தத்துவ ஞானத்தை தனக்கு போதிக்கும் படி வேண்டினார்.

இவரது தவத்தை மெச்சி, வேண்டும் வரம் தந்தருளினார் பெருமாள். எனவே பெருமாளே அனைத்தும் என்றும், அவரைப்பற்றி வணங்கும் வழிமுறைகளையும் மற்றும் துதி பாடல்களையும் 4 ஆயிரம் அடிகள் கொண்ட” நாரதீய புராணம்’ என்ற நூலை இத்தலத்தில் நாரதர் அருளியதாக வரலாறு கூறுகிறது.

இக்கோயிலின் மேற்குப் புற வாசலில் போகும்போது வாசலின் மேல் காளிங்கன் மீது கண்ணன் நர்த்தனம் ஆடுவதுபோல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் காண்பதற்கு மிகுந்த அழகுடன் உள்ளது.

அந்தக் கண்ணனை தாங்கி நிற்கும் இரண்டு தூண்களில் 2 புறமும் தசாவதார காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற பம்பை நதியின் வடக்கே இத்தலம் அமைந்துள்ளது. கேரளாவில் பஞ்சபாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த தலங்களில் இதுவும் ஒன்று. இதை நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Recent Post