மார்புச்சளியை நீக்கும் பனங்கற்கண்டு பால்

பனங்கற்கண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. பனங்கற்கண்டில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளன. பனங்கற்கண்டில் இனிப்பு சுவை குறைந்த அளவில் இருப்பதால் இது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

பனங்கற்கண்டை பாலில் கலந்து குடித்தால் மார்புச்சளி நீங்கும். மேலும் தொண்டைப்புண் நீங்கும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்கும்.

சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் காணாமல் போய்விடும்.

பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

2 மேசைக்கரண்டி அளவு வெங்காயச் சாறு மற்றும் 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சனைகள் சரியாகும்.

பனங்கற்கண்டை பாலில் போட்டு தினமும் காலையில் குடித்து வந்தால் நல்ல பசியை தூண்டும். இளைத்த உடல் பெருக்க உதவும்.

கருவுற்ற பெண்கள் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும்.

Recent Post

RELATED POST