ஊர் -பரமேஸ்வர விண்ணகரம்
மாவட்டம் -காஞ்சிபுரம்
மாநிலம்– தமிழ்நாடு
மூலவர் -பரமபத நாதர்
தாயார் -வைகுந்த வல்லி
தீர்த்தம் -ஆயிரம் தீர்த்தம்
திருவிழா -வைகாசி 10 நாட்கள் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம் – காலை 7:30 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை
தல வரலாறு
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 57 வது திவ்யதேசம் ஆகும். விரோச மன்னர் என்பவர் விதர்ப்ப தேசம் எனும் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தார். அவர் முற்பிறவியில் பெற்ற சாபத்தினால், கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டு குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. சிவனின் தீவிர பக்தனான மன்னன் காஞ்சியில் உள்ள கைலாசநாதரை வேண்டி யாகம் ஒன்று செய்தார்.
மகாவிஷ்ணுவின் துவார பாலகர்களாக இருந்த பல்லவன், வில்லவன் இருவரையும் மகனாக பிறக்கும்படி அருளினார் சிவன். இளவரசர்களாக பிறந்தாலும் பெருமாளின் மீது கொண்ட பக்தி மட்டும் குறையாமல் இருந்து, நாட்டு மக்களின் நன்மைக்காக பல விரதங்களை மேற்கொண்டு ஒரு யாகம் செய்தனர். இவ்விரதங்களில் மகிழுந்து பெருமாள்” ஸ்ரீ வைகுண்ட நாதனாக’ காட்சி கொடுத்தார்.
பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரும் பூலோகம் வந்து தவம் செய்த போது, சில ரிஷிகள் உதவி செய்தனர். மூன்று தேவர்களை அழைத்து செல்ல சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் பூலோகம் வந்த வேளையில் ரிஷிகள் தவவலிமையால் தேவியர்களை நெருங்க முடியவில்லை.
எனவே ஒரு கந்தர்வக் கன்னியை அனுப்பி ரிஷிகளின் தவத்தை கலைக்க முயன்றனர். அதில் ஒரு ரிஷியான பரத்வாஜர் காமுற, ஒரு குழந்தை பிறந்தது. பெருமாள் வேடுவ வடிவமெடுத்து, அக்குழந்தைக்கு “பரமே ச்சுர வர்மன்” எனப் பெயரிட்டு வளர்த்து ஆய கலைகளையும் கற்றுக் கொடுத்தார்.
கலைகள் கற்றுத் தேர்வதற்குள் பரமேச்சுரனுக்கு ஆயுள் இறுதிக்காலம் வந்தது. அவனது ஆயுளை அதிகரிக்க என்னி விஷ்ணு எமனிடம் சூசகமாக ஒரு செயலை செய்து ஆயிலை நீடித்தார். இந்த பரமேச்சுர வர்மன் தான் பல்லவ வம்சத்தின் துவக்கமாக இருந்து ஆட்சி செய்தார் என்று வரலாறு கூறுகின்றனர். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளுடன் பல்லவ மன்னனின் பெருமைகளையும் சேர்த்து பாடியுள்ளார்.