பரிமள ரங்கநாதர் கோவில் வரலாறு

ஊர்: திருஇந்தளூர்

மாவட்டம்: நாகப்பட்டினம்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : பரிமளரங்கநாதர்

தாயார் : பரிமள ரங்கநாயகி

தீர்த்தம்: இந்து புஷ்கரிணி

சிறப்பு திருவிழாக்கள்: சித்திரை மாதப்பிறப்பில் பெருமாள் வீதி புறப்பாடு, ஆடி மதம் 10 நாள் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம். ஐப்பசியில் பத்துநாள் துலா பிரமோற்சவம்

திறக்கும் நேரம்: காலை 6:30 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

தல வரலாறு

அம்பரீஷன் எனும் மன்னன், பெருமாளின் மீது கொண்ட பக்தியால் பல வருடங்களாக 99 முறை ஏகாதசியில் முறைப்படி கடுமையாக விரதம் ஏற்று வந்தார். அப்போது தேவர்கள் அவர் நூறாவது முறை இவ்விரதத்தை இருந்து முடித்தால் தேவலோகப் பதவி கிடைத்து விடுமோ என அஞ்சி, துர்வாச முனிவரிடம் முறையிட்டனர்.

துர்வாசரும் பூமிக்கு வந்து மன்னரைச் சந்தித்தார். அவ்வேளையில் தன் விரதத்தை தடுக்கத்தான் துர்வாசர் வந்திருக்கிறார் என்று அறியாத மன்னன், சகல மரியாதையுடன் அவரை வரவேற்று தாங்களும் என்னுடன் உணவருந்த வாருங்கள் என்று அழைத்தான். முனிவரும் சம்மதித்து, நான் நீராடிவிட்டு வருகிறேன் என்று சொல்லி, தாமதமாக வந்தால் விரதம் கெடும் என்று எண்ணினார்.

துவாதசி முடிய சில மணி நேரங்களே இருந்தது. அவர் நீராடி விட்டு வருவதற்குள் துவாதசி போய்விடும் என்று எண்ணி உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்து விரதத்தை முடித்தார் அம்பரீசன். இதை ஞான திருஷ்டியால் கண்ட துர்வாசர் மிகுந்த கோபமுற்று ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனை கொல்லுமாறு கட்டளையிட்டார்.

மன்னர் இதற்கு பயந்து பரிமளரங்கநாதரிடம், உனக்காக ஏகாதசி விரதம் இருக்கக் கூடாது என்பதற்காக ஏவப்பட்டுள்ள பூதத்திடம் இருந்து என்னை காப்பாற்று என பெருமாளிடம் சரணடைந்தார். மிகுந்த சினத்துடன் வந்த பெருமாள் பூதத்தை விரட்டினார்.

இதை அறிந்த துர்வாசர், பெருமாளிடம் மன்னிப்பு கேட்டார். பெருமாளும் துர்வாசரின் கர்வத்தை அடக்கி மன்னித்து அருளினார். நூறு ஏகாதசி விரதமிருந்த மன்னனுக்கு வேண்டிய வரம் கொடுத்து. இத்தலத்திலே தங்கி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 26 வது திவ்ய தேசம். இங்கு ஐந்து நிலைகளைக்கொண்டு, ராஜகோபுரம் அகன்றும் பெரியதுமாக உள்ளது. இங்கு சந்திரன் தன் சாபம் நீங்கப் பெற்ற, சந்திர புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. கங்கையை விட காவிரி புனிதமானவள் என பெயர் வர காரணமானது இத்தளம். எமனும் அம்பரீசனும் பெருமாளின் பாதத்தில் பூஜை செய்வது போல் அமைப்பு உள்ளது.

Recent Post

RELATED POST