குடல் மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுக்கும் பார்லி அரிசி

மத்திய ஆசிய நாடுகளில் அதிக மக்களால் உண்ணப்படும் உணவு தானியமாக பார்லி அரிசி இருக்கிறது. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த பார்லி அரிசி அல்லது பார்லி தானியங்களை அதிகம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி இருக்கிறது. பார்லி தானியங்களில் வைட்டமின் சத்துக்களும், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. எனவே தினந்தோறும் பார்லி கஞ்சியை குடிப்பவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டு, ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

பார்லி தானியங்கள் அனைத்து வகை புற்று நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது, என்று பல ஆய்வில் கூறப்படுகிறது.பார்லி தானியங்களை உணவாக அதிகம் பயன்படுத்தும் சீன நாட்டின் யுன்னான் மாகாணத்தில் இருக்கும் மக்களுக்கு எந்த வகையான புற்று நோய் பாதிப்புகளும் ஏற்பட வில்லை என மருத்துவ ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர்.

பார்லியில் இருக்கும் நார்ச்சத்து குடல் மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுக்கிறது, நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அந்நோயின் வீரியத்தை குறைக்க உதவுகிறது. பார்லி தானியங்களை சாறு பதத்தில் செய்து, தினமும் குடித்து வந்ந்தால் எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதி அடையும். மேலும் வயதானவர்களுக்கு எலும்பு, மூட்டுகள் தேய்மானம், வலுவிழத்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படுவதை பத்து சதவீதம் குறைக்கும் தன்மை பார்லி கொண்டது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.

பார்லி தானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவு சாப்பிடுபவர்களுக்கு உடலில் பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களின் அளவு சரிசமமாக காக்கப்பட்டு, பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.

வைட்டமின் சி சத்தும் இந்த பார்லி தானியங்களில் இருப்பதால் அதை சாப்பிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். இதனால் காயங்கள் வேகமாக ஆறவும் வழி வகை செய்கிறது. மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது.

தினமும் பார்லி தானியம் கொண்டு செய்யப்பட்ட உணவோ அல்லது பார்லி கஞ்சி குடித்து வந்தால் வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பகால நீரிழிவு போன்றவை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் பார்லி தானியம் கொண்டிருக்கிறது. கருவுற்ற பெண்களின் இரத்தத்தில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலை தூய்மை படுத்தும் பணியை பார்லி சிறப்பாக செய்கிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பார்லி கஞ்சி குடிப்பவர்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் காக்கிறது. உடலுக்கு வலிமையையும் தருகிறது.

Recent Post