அனைத்து நோய்களையும் விரட்டியடிக்கும் பருப்பு கீரை

பருப்புகீரை (PURSLANE) சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் ஒமேகா 3 எனும் அமிலம் இருக்கிறது. மேலும், இதனை கோழிக் கீரை என்றும் சொல்லப்படும்.

100 கிராம் பருப்பு கீரையில் இருக்கும் சத்துக்கள்

  • ஆற்றல் – 27 கிலோ கலோரிகள்
  • ஈரப்பதம் – 90 கிராம்
  • புரதம் – 2 கிராம்
  • கொழுப்பு – 1 கிராம்
  • தாதுச்சத்து – 2 கிராம்
  • நார்ச்சத்து – 1 கிராம்
  • கார்போஹைட்ரேட் – 3 கிராம்
  • கால்சியம் – 111 மி.கி.
  • பாஸ்பரஸ் – 45 மி.கி.
  • இரும்புச்சத்து – 15 மி.கி.

பருப்புக் கீரையின் மருத்துவ குணங்கள்

ஒமேகா 3 என்ற அமிலம் இதயத்தை பாதுகாக்கிறது, மாரடைப்பை தடுக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. வறண்ட தோல் மாறி பளபளப்பாகும்.

ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கும். நகம் உடைதல், முடி கொட்டுதல் தடுக்கப்படும். கை கால் எரிச்சல், கல்லீரல் கோளாறுகள், வயிற்றுப் போக்கு, கண் நோய், தாய்ப்பால் சுரக்காமை, உடல் வீக்கம், சிறு நீர் நன்கு பிரியாமை, வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளை இது குணப்படுத்தும்.

பருப்புகீரையில் ஒமேகா 3, வைட்டமின் பி, கரோட்டீனும் அதிகமாக இருப்பதால் கண் பார்வை திறனை இது பாதுகாக்கிறது. குறைந்தது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு வேளைகளாவது பருப்புக் கீரை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பருப்புக் கீரையை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் குடல் புழுக்கள் அழியும். மலச்சிக்கல் நீங்கும். குடல் சுத்தமாகும். ஒல்லியானவர்கள் சதை போடுவார்கள். அதிகம் சதை போடாமல் இருக்க சிறிது தயிர் சேர்த்து சாப்பிட்டால் நல்லது.

வயிற்றுப் போக்கும் ஏற்பட்டால், இரண்டு பிடி கீரையை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி அருந்தினால் போதும், வயிற்றுப் போக்கு கட்டுப்படும்.

தாய்ப்பால் நன்கு சுரக்க பெண்கள் தினம் ஒருவேளை இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் பால் நன்கு சுரக்கும். மேலும், மாதவிடாய் பிரச்சனைகளும், பித்தக் கோளாறும், உடல் வீக்கமும் குணமாகும்.

கை, கால் எரிச்சல், புண்கள், கொப்புளங்கல் ஏற்பட்டால் அந்த இடத்தில் இக்கீரையை நன்கு அரைத்து (தண்டையும் சேர்த்துக் கொள்ளலாம்), தடவி வந்ததால் பூரண குணமாகும்.

5 கிராம் இக்கீரையின் விதைகளை எடுத்து அரைத்து ஒரு டம்ளர் இளநீரில் கரைத்து குடித்தால் வெள்ளை நோய் குணமாகும் மற்றும் சிறுநீர் செல்லும் போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.

பருப்புக் கீரை மசியலுடன், நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர, வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு, நீர்க்கடுப்பு, வியர்க்குரு, வேனல்கட்டிகள் போன்றவை தவிர்க்கப்படும்.

வாரம் மூன்று அல்லது நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரலை சிறப்பாக இயங்க வைத்து ரத்ததை சுத்தப்படுத்துகிறது. மேலும், தோலிற்கு பளபளப்பான தோற்றத்தை தருகிறது.

இக்கீரையில் பொட்டாசியம், சோடியம் இருப்பதால் ரத்தக் கொதிப்பு, பக்கவாதம், மாரடைப்பு போன்றவைகள் ஏற்படாது. பருப்புக்கீரையுடன் சின்ன வெங்காயம், சீரகம், தக்காளி, மிளகு, பூண்டு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் மெலியும்.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள். பித்தப் பையில் கல் உள்ளவர்கள் உண்ணக்கூடாது. கபதேகிகள் இக்கீரையை குறைந்த அளவில் உண்டால் நல்லது. அதுவும் மிளகு அதிக அளவு சேர்த்து உண்பது நல்லது.

Recent Post