நன்கு பசி எடுக்க இதை சாப்பிட்டால் போதும்

தினமும் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து வந்தால் நல்ல பசி உண்டாகும். பசியின்மை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால், பசியின்மை பறந்து போகும்.

சுக்கு, மிளகு, திப்பிலி பொடி செய்து, சம அளவு எடுத்து, வெந்நீர் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட்டால், நல்ல பசி உண்டாகும்.

மாதுளம் பழ சாறுடன் சிறிதளவு இந்துப்பு, தேன் கலந்து குடித்து வந்தால், பசியை தூண்டும்.

பட்டை, ஏலக்காய், தனியா, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து, முதல் நாள் இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் அவற்றை வடிகட்டி தண்ணீரை மட்டும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.

ஒரு கிளாஸ் வெந்நீரில் பெரிய நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை இந்துப்பு, இரண்டு கிராம் ஓமம் சேர்த்து அந்தத் தண்ணீரை வடிகட்டி, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக குடித்து வந்தால் நல்ல பசி எடுக்கும்.

மிளகுப் பொடியையும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கும்.

Recent Post

RELATED POST