நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கும் paytm நிறுவனர்… பூஜ்யம் முதல் ஒரு லட்சம் கோடி வரை…

இப்பொழுது பெரும்பாலான கடைகளில் நாம் அதிகம் paytm எனும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயன்படுத்துகிறோம்.

இதனை உருவாக்கியவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த விஜய் சேகர் சர்மா. இவர் தற்போது இந்தியாவின் 50 செல்வாக்குமிக்க நபர்களில் இவர் 45 வது இடத்தை பிடித்துள்ளார். இதனை fame India magazine மற்றும் Asia post என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இவரது paytm நிறுவனம் பணமதிப்பிழப்பு சமயத்தில் paytm app தான் பணப்பரிவர்த்தனை செய்ய மக்கள் அதிகமாக பயன்படுத்தினர். அந்த சமயத்தில்தான் நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்தது.

ஒரு காலத்தில் ஒருவேளை உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார், ஆனால் அவரது நம்பிக்கைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த பரிசுதான் இந்த நிறுவனம். மேலும் இவரது ஒரு வருட சம்பளம் 3 கோடி ஆகும். அதாவது ஒரு நாளைக்கு இவரது சம்பளம் 82191 ரூபாயாகும். இவரது இதர செலவுகளை சேர்த்தால் ஒரு நாள் சம்பளம் லட்சத்தை தாண்டும்.

இவரின் சொத்து மதிப்பு 2.35 பில்லியன் ஆகும். மேலும் இவரது நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் கோடி ஆகும்.

உலகப் புகழ்பெற்ற Forbes பத்திரிக்கை இவரை 56வது பணக்கார மனிதர்கள் பட்டியலில் 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Post

RELATED POST