தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா??

நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை வேர்க்கடலையில் உள்ளது. உடல் எடையைக் குறைப்பதற்காக டயட்டில் இருப்பவர்கள் வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து மிக மெதுவாக ஜீரணம் அடைந்து உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கும். மேலும் உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் வேலையைச் செய்யும்.

வேர்க்கடலையில் உள்ள மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுப்பதோடு, ரத்தத்தில் உள்ள எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்க உதவி செய்கிறது.

உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமின்றி வேர்க்கடலையை ஒரு கைப்பிடி அளவு தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

Recent Post

RELATED POST