நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் வெள்ளரி இனத்தை சேர்ந்த ஒரு காய்கறி. பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்திலும் மருத்துவ குணம் உள்ளது. பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் மற்றும் தாது உப்புக்கள் உள்ளது.

பீர்க்கங்காயில் பிஞ்சுவை விட முற்றிய பீர்க்கங்காய் சமையலுக்கு சிறந்தது. பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின்கள் தொற்று நோய்க் கிருமிகள் தாக்காமல் உடலை பாதுகாக்கிறது. மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

பீர்கங்காய் சாறு மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பீர்க்கங்காய் இலைச்சாற்றை சொரி, சிரங்கு, புண்கள் உள்ள இடத்தில் தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றில் அமில சுரப்பு அதிகமாவதை தடுக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

பீர்க்கங்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலுக்கும் மூல நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

பீர்க்கங்காய் கொடியின் வேர்ப்பகுதியை நன்கு உலர்த்தி பொடி செய்து தினமும் 2 வேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் வெளியேறும்.

பீர்க்கங்காய் வாங்கும்போது தோள்களில் வெடிப்பு அல்லது நிறம் மாறிப் போயிருந்தால் வாங்க வேண்டாம்.

பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த காய் என்பதால் வாங்கிய உடனே சமைத்து சாப்பிடுவது நல்லது. அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் உபயோகித்து விட வேண்டும்.

Recent Post

RELATED POST