Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும் மிளகு

milagu benefits in tamil

மருத்துவ குறிப்புகள்

வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும் மிளகு

உலகிலேயே கேரளாவில் தான் மிளகு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளாவிலிருந்து அரபிக்கடல் வழியாக அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன்பிறகு அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.

மிளகில் வெண் மிளகு, பச்சை மிளகு, சிவப்பு மிளகு, கரு மிளகு என நான்கு வகைகள் உள்ளது.

மிளகு கொடி வகையை சேர்ந்தது. மிளகு சிறந்த சமையல் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் விளங்குகிறது. இதில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

black pepper health benefits in tamil

இருமல்

அடிக்கடி ஏற்படும் இருமல் தொல்லைக்கு மிளகு நல்ல மருந்தாக செயல்படுகிறது. மிளகுத் தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். கரு மிளகு இருமல் சளிக்கு மிகவும் நல்ல மருந்து.

நெஞ்சு சளி

10 பூண்டு பற்களை எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். அதனை பசும்பாலுடன் சேர்த்து வேக வைக்க வேண்டும். அதோடு மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து இரவில் குடித்து வந்தால் நெஞ்சு சளி குணமாகும். மேலும் ஜலதோஷம், மூக்கடைப்பு நீங்கும்.

முடி வளர

மிளகுத் தூளுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.

முகப்பரு

முகப்பரு அதிகம் உள்ளவர்கள் சந்தனம், ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்து, பருக்கள் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால், விரைவில் பருக்கள் நீங்கும்.

வாய் துர்நாற்றம்

மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் வலி, ஈறுகளில் ரத்தம், வாய் துர்நாற்றம், சொத்தைப் பல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

தலைவலி

மிளகுடன் சிறிது வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் நீங்கும். மிளகை அரைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.

ரத்தசோகை

ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்கள் கல்யாண முருங்கை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.

செரிமான பிரச்சனை

மிளகை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் உணவு எளிதில் செரிமானமாகும். செரிமானத் தொந்தரவுகள் நீங்கும். மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும்.

மேலும் அனைத்து விதமான மூலிகைகள் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top