குளிர்காலம் என்றாலே அனைவர்க்கும் மகிழ்ச்சிதான். அதே நேரத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளும் வந்து விடுகிறது. குளிர்காலத்தில் வரும் நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். அப்படி நம்முடைய நோயெதிர்ப்பை அதிகரிக்கக் கூடிய ஒன்று நம் வீட்டில் இருக்கும் சோம்பு அல்லது பெருஞ்சீரகம்.
சோம்பிற்கு சில ஆயுர்வேத மருத்துவ குணங்கள் உண்டு. இந்த பெருஞ்சீரகம் ஜூரண சக்தியை மேம்படுத்துகிறது. பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ஸ் இருமல் மற்றும் சளியிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
பெருஞ்சீரகத்தில் உள்ள விட்டமின் சி மழைக்காலங்களில் ஏற்படும் நோயெதிர்ப்பு சக்தி குறைபாட்டை நீக்குகிறது.
பெருஞ்சீராக டீ செய்முறை
ஒரு கப் தேநீர்க்கு ஒரு டீஸ்பூன் சோம்பினை எடுத்துக் கொள்ளலாம். கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து. சூடான பெருஞ்சீரக டீயை குடிக்கலாம்.