முகப்பருக்களின் தழும்புகள் மறைவதற்கு எளிய வீட்டு வைத்தியம்..!

முகத்தில் முகப்பருக்கள் வந்து, அது மறைந்தவுடன் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு தேவையான வீட்டு வைத்தியங்கள் பற்றி பார்க்கலாம்.

முகப்பரு தழும்புகள் மறைவதற்கான வீட்டு வைத்தியம்..!

முகப்பருக்களை விட, முகப்பருக்கள் வந்த பிறகு மறையாமல் இருக்கும் தழும்புகள் தான், பலருக்கும் அதிக தொல்லைகளை தரும். அது நீண்ட நாட்களுக்கு மறையாமல் அப்படியே இருந்து, அழகையே கெடுக்கும். அந்த தழும்புகள் மறைவதற்கு, நம் அனைவரது வீட்டிலேயே மருந்துகள் உள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

எலுமிச்சை சாற்றை தேன், பால், பாதாம் எண்ணெய் ஆகியவற்றோடு சேர்த்து, குழைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு தழும்புகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அப்படி மேற்கொண்ட பொருட்களை முகத்தில் போடுவது அலர்ஜியை தருவதாக இருந்தால், எலுமிச்சை சாற்றை மட்டும் முகத்தில் தடவினாலும், முகப்பரு தழும்புகள் மறைந்துவிடும்.

வீட்டில் கண்டிப்பாக இருக்கக்கூடிய பொருட்களில் ஒன்று வெந்தயம். இதனையும், முகத்தில் இருக்கும் தழும்புகளை போக்குவதற்கு நாம் பயன்படுத்தலாம். அதாவது, வெந்தயத்தை, நீரில் போட்டு கொதிக்க வைத்துவிட்டு, சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த நீரில், பஞ்சை முக்கி, முகத்தில் தடவி வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முகப்பரு தழும்புகள் மறைந்துவிடும்.

சந்தனத்தை இரவு நேரங்களில் நீரில் போட்டு ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலை மற்றும் மாலை வேளைகளில் பயன்படுத்தி வந்தால், தழும்புகள் உடனே மறைந்துவிடும். இதுமட்டுமின்றி, சந்தனத்தோடு, ரோஸ் வாட்டர் பயன்படுத்தியும், முகப்பரு தழும்புகளை போக்க முடியும்.

கற்றாழை ஜெல்லையும் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வந்தால் தழும்புகள் விரைவாகவே மறைந்துவிடும்.

Recent Post

RELATED POST