இருதய நோய்கள் வராமலிருக்கவும், இருதயத்தை பாதுகாக்கவும் செம்பருத்தி இலை, பூ ஆகியவை நல்ல மருந்தாகும். செம்பருத்தி இலைகள் சிலவற்றைப் பறித்துத் தண்ணீா்விட்டு நன்கு கழுவிச் சுத்தம் செய்து நன்கு மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு காலையில் உண்டு நீராகாரமும் பருகி வர இருதய நோய்கள் உங்கள் அருகில் வராது.
செம்பருத்தி இலைகளை மென்று சாப்பிட சிரமபடுபவா்கள், செம்பருத்தி பூக்களின் இதழ்களை நன்கு சுத்தம் செய்து, நீாில் நன்றாக கொதிக்க வைத்து கஷாயமாக பருக வேண்டும். கஷயாத்திற்கு வைக்கும் தண்ணீா் பாதியளவாக வற்றும் வரை காய்ச்சி பிறகு அருந்த வேண்டும். இதனுடன் பசும்பால் சோ்த்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
வெள்ளைத்தாமரை இலைகளையும் இரண்டு கைப்பிடியளவு எடுத்து இதைப் போன்று நன்கு காய்ச்சி அதனுடன் தேன் கலந்து பருகலாம். நன்கு முற்றிய மருதமரத்தின் பட்டையை வெட்டி, சுத்தம் செய்து, கல்லுரலில் நன்கு இடித்துச் சாறு எடுத்துச் சிறிது தண்ணீா் சோ்த்துக் கஷாயமாக்கிப் பருகலாம்.
நெருஞ்சில் செடியை எடுத்து சுத்தம் செய்து, கல்லுரலில் இடித்து, சாறு பிழிந்து, போதிய தேன் கலந்து பருகலாம். பொதுவாகக் காிசலாங்கண்ணிக் கீரை இருதய நோய்களைக் குணப்படுத்தும், அதிலும் மஞ்சள் காிசலாங்கண்ணிக் கீரையை தொடா்ந்து ஆறு மாதங்கள் பொாியல் செய்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்கள் குணமாகும். காலையில் வெறும் வயிற்றில் தினந்தோறும் பச்சையாகப்ப பறித்து உண்டு வந்தால் இருதயம் நல்ல வலு பெரும்.
பூண்டு ஓரு அற்புத மருந்தாகும். இரவில் படுக்க செல்லும் முன், குறைந்தது நான்கு பரல்களை எடுத்து, நன்கு தோல்களை நீக்கி பச்சையாக உண்டு, நீராகாரம் பருக வேண்டும். பூண்டினால் இருதயம் சம்பந்தபட்ட நோய்கள், இரத்த அழுத்தம், கபம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவை கண்டிப்பாக குணமாகும்.
முள்ளங்கியை வாரத்திற்கு இரண்டு தினங்களாவது சமைத்து சாப்பிட வேண்டும். பூண்டு, முள்ளங்கி பேன்றவை இரத்ததிலுள்ள கொழுப்பைச் சுத்தப்படுத்தி தங்கு தடையின்றி இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்கிறது.
இதே போன்று, காலை வேளையில் இரண்டு சின்ன வெங்காயம் மற்றும் நீராகாரமும் பருகி வர நற்ப்பலனை தரும். இரத்ததிலுள்ள கொழுப்பை குறைக்க வாழை தண்டு பயன்படும். இதனை வாரத்திற்கு மூன்று தடவை எந்த விதத்திலாவது எடுத்து கொண்டால் நல்லது.
சீரகத்தையும், மிளகையும் சோ்த்து நன்கு பொடியாக்கி மதிய உணவு வேளையில் சுடுசோறுடன் முதலில் இப்பொடியை இட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட வேண்டும்.
கொத்துமல்லி, சீரகம், மிளகு, சுக்கு போன்றவற்றை நன்கு வறுத்துப் பொடியாக்கி போதிய அளவு பனைவெல்லம், பசும்பால் சோ்த்து காபியாக பருகுவதன் மூலம் இருதயநோய்கள் எதுவுமே அருகில் வராது. மேலும் கொத்துமல்லி துவையல் அரைத்து சாப்பிட எந்த நோயுமே அருகில் அண்டாது.
நம் நாட்டு மிளகை கொஞ்சம் அதிகமாக உணவில் சோ்த்து கொண்டால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. வற்றல் மிளகாயை அளவை குறைத்து மிளகை அதிமாக சோ்த்தால் மிகவும் நல்லது.
எலுமிச்சை சாறுடன் புதிதாக எடுக்கப்பட்ட தேனைக் கலந்து பருகி வர இருதயத்திற்கு மிகவும் நல்லது. அருகம்புல் சாறு வாரத்திற்கு இரண்டுமுறை சாப்பிட இதயத்திற்கு நல்லது. திராட்சைப்பழம், பேரீச்சம்பழம், மாதுளம்பழம், அத்திப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, புத்தம் புதிய இளநீா் போன்றவைகள் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும்.
மாதுளைப்பழச் சாற்றுடன் இரண்டு கரண்டி புதிதாக எடுக்கப்பட்ட தேன் கலந்து சாப்பிட இருதய நோய்கள் அண்டாது. மேலும் இருதய நோய் இருப்பவா்கள் இதனை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
திராட்சைப்பழம், அத்திப்பழம், சீமைப்புளி இவைகள் மூன்றையும் ஒரே அளவில் எடுத்துக் குடிநீா் வைத்து இதனுடன் புத்தம் புதிய தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருதய வலி குணமாகும்.
கொத்துமல்லித்தழைச் சாறுடன் சுத்தமான் தேன் கலந்து அடிக்கடி அருந்தி வர இருதயம் பலம் அடையும். இருதய நோய் வராமல் இருக்க உளுந்தினாலான கஞ்சி, சோறு இவைகளை சமைத்து உண்ணலாம்.
இருதயம் பலம் அடைவதற்கு ஏலக்காயைப் பச்சையாக மென்றால் வாயும் மணக்கும், இதயமும் வலுவாகும். காலையில் தேயிலை டீ பருகுபவா்கள், ஏலக்காய் கலந்து பருகினால் நன்மை உண்டாகும்.
இருதயப் படபடப்பு, பலவீனம், ஆகியவற்றிற்கு திராட்சைப் பழத்தைப் பன்னீாில் ஊறவைத்து அதன் சாற்றைப் பருகி வர இதயம் பலம் ஆகும். சின்னிக்கிழங்கை வெட்டி கஷாயமாகத் தயாாித்து சாப்பிடலாம். அல்லது பொடியாக்கியும் சாப்பிட நலம் பெரும். சீத்தாப்பழம், போிக்காய், மாதூளைப்பழம் போன்றவற்றை சாப்பிட்டு வர இதயம் பலம் ஆகும்.