உங்களுக்கு மாரடைப்பு வராம இருக்கணுமா…இதை ஃபாலோ பண்ணுங்க.

நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதயம் ஆரோக்கியமாக செயல்பட உணவுகளில் முதலில் கவனத்தை செலுத்த வேண்டும்.

தினமும் சிறிது வால்நட்ஸை சாப்பிட்டால், இதய நோய்களின் அபாயம் குறையும். உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதய ஆரோக்கியம் மேம்படும்.

தினமும் ஒரு கையளவு பெர்ரிப் பழங்களை சாப்பிடும் வழக்கத்தைக் கொள்ளுங்கள். ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும்.

ஆளி விதை, சியா விதை போன்றவை இதயத்திற்கு மிகவும் நல்லது. இது இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்த அளவு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைப் பராமரிக்க உதவுகிறது. மேலும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்கும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதனால் இதய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

தக்காளியில் உள்ள லைகோபைன் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் அபாயத்தை தடுக்கும். இரத்த ஓட்டத்தை சீராகப் பராமரிக்கும். எனவே தக்காளியை தினமும் தங்களது டயட்டில் சேர்க்க வேண்டியது அவசியம்.

பசலைக்கீரை, ப்ராக்கோலி போன்றவற்றில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் கே மற்றும் டயட்டரி நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மீன், நட்ஸ் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இவை உடலில் ட்ரைகிளிசரைடுகளின் அளவை சீராக்கி இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மேலும் தமனிகளில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கும்.

Recent Post