Connect with us

TamilXP

குடியரசு தலைவருக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன?

தெரிந்து கொள்வோம்

குடியரசு தலைவருக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன?

உலகின் மிகப்பெரிய ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றான ராஷ்டிரபதி பவன் இந்திய ஜனாதிபதியின் இல்லமாகும். 200,000 சதுர அடி பரப்பளவில் 330 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்த கட்டிடத்தில் 340 அறைகள் உள்ளன.

குடியரசுத் தலைவர் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விமானம், ரயிலில் இலவசமாகப் பயணம் செய்யலாம். உடன் இன்னொரு நபரையும் இலவசமாக அழைத்து வரலாம்.

குடியரசு தலைவருக்கு மருத்துவ சேவைகள் இலவசம். அத்துடன் வாடகை இல்லாத வீடு, 2 இலவச லேண்ட்லைன்கள், ஒரு மொபைல் போன், ஐந்து தனிப்பட்ட ஊழியர்கள் வழங்கப்படும்.

முப்படைகளின் உச்ச தளபதியான இந்திய குடியரசு தலைவரின் சம்பளம் மாதம் ரூ. 1.25 லட்சமாக இருந்த மாத ஊதியம் 2018 ஆம் ஆண்டிலிருந்து ரூ. 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வுக்கு பிறகும் இந்தியக் குடியரசுத் தலைவர் எண்ணற்ற நன்மைகளைப் பெற தகுதியுடையவர்.

குடியரசு தலைவரைப் போன்று துணை குடியரசு தலைவருக்கும், இலவச தங்குமிடம், தனிப்பட்ட பாதுகாப்பு, மருத்துவம், ரயில் மற்றும் விமானப் பயணம், லேண்ட் லைன் இணைப்பு, மொபைல் போன் சேவை மற்றும் பணியாளர்கள் ஆகியவை வழங்கப்படும்.

இந்திய குடியரசு தலைவர், ராஷ்டிரபதி பவனையும் கவனித்து கொள்ள, ஜனாதிபதிக்கு நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வழங்கப்படுகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தெரிந்து கொள்வோம்

Advertisement
Advertisement
To Top