ஊரடங்கு காலம் கண்கள் பத்திரம் – கண்களை பாதுகாத்து கொள்வது எப்படி?

ஊரடங்கு காலத்தில் பொழுதை போக்க அனைவரும் செல்ஃபோன், லேப்டாப், கேட்ஜெட்டுகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இவற்றின் பயன்பாடு பொழுதைக் போக்க உதவினாலும் கண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, கண்களைப் எவ்வாறு பாதுகாப்பது குறித்து மருத்துவர் ஷிவ் ஷங்கர் மிஸ்ரா என்பவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியின் அடிபடையில் சில குறிப்புகள் உங்களுக்காக…

கண்களுக்கு ஓய்வு

கண்களில் வெள்ளரி காயை வட்டமாக நறுக்கி கண்களில் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம்.

அதேபோல், ரோஸ், சாமந்தி, லாவண்டர், தேங்காய் எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களை தடவி மசாஜ் செய்யலாம். கண்களை மூடி இமைகளில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். 2 அல்லது 3 நிமிடங்கள் இப்படி செய்தால் இதமாக இருக்கும்.

அடுத்து 20-20-20 என்ற முறையை பின்பற்றலாம். அதாவது 20 நிமிடம் செல்போனை பார்த்தால், அடுத்த 20 நொடி இடைவேளை, அடுத்து 20 அடி தூரம் கொண்ட பொருட்களை பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யவதினால் கண்கள் வறட்சியாவதை தவிர்க்கலாம்.

முற்றிலும் எப்போது தவிர்க்க வேண்டும்..?

தலைவலி, கண் எரிச்சல், தூக்கம், கழுத்து வலி, தோள்பட்டை வலி, மங்களான பார்வை, கண் வறட்சி, தண்ணீர் வடிவது போன்ற உபாதைகள் இருந்தால் உடனே செல்போன், லேப்டாப், கணினி பயன்பாடுகளை தவிர்த்து கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

பயன்படுத்தும் முறை

லேப்டாப், கணினியை பயன்படுத்தும் போது 18-30 இஞ்ச் தூரத்தில் வைத்து பயன்படுத்துவது நல்லது. செல்ஃபோன், லேப்டாப்பின் பிரைட்னஸை குறைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறையும் செல்ஃபோன், லாப்டாப்பின் திரை மீது இருக்கும் தூசிகளை துடைத்துவிட்டு பயன்படுத்துங்கள். இதனால் தெளிவான திரை மட்டுமல்லாது கூர்மையாக பார்த்து கண்களுக்கு வேலை கொடுப்பதும் குறையும்.

Recent Post

RELATED POST