வெள்ளை பூசணிக்காய் மருத்துவ குணங்கள்

உலகம் முழுவதும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட பூசணி வகைகள் பயிரிடப்படுகிறது. இதில் சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் காணப்படுகிறது. இந்தியாவில் பூசணி விதை மருத்துவ தயாரிப்புகளுக்கு பயன்படுத்தபடுகிறது.

பூசணிக்காயிலிருந்து நீக்கப்படும் விதைகளிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. பூசணிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, போலட், நியாஸின், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

உடல் எடையைக் குறைக்க

பூசணிக்காயில் கலோரி மிகவும் குறைவு. 100 கிராம் பூசணியில் 26 கலோரிகள் மட்டுமே இருக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவில் பூசணியை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

புற்று நோய்

பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் உருவாகும் அபாயம் குறையும். பூசணியில் பீட்டா கரோட்டின் இருப்பதால் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும்.

கண்கள் ஆரோக்கியம்

கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வைட்டமின் A மிக முக்கியம். பூசணிக்காயில் உள்ள வைட்டமின் A கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

செரிமான பிரச்சனை

ஒரு கப் பூசணிக்காயில் 3 கிராம் ஃபைபர் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது.

அல்சர் பிரச்சனை

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் இருப்பவர்களுக்கும் அசிடிட்டி பிரச்சினை உருவாகும். இதை சரிசெய்ய பூசணி சாறு அருந்த வேண்டும்.

குடல் ஆரோக்கியம்

வெள்ளைப்பூசணி சாறில் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றி குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

நீர்ச்சத்து

கோடை காலங்களில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் உடல் சூடு குறையும். உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

பூசணி விதையின் மருத்துவ பயன்கள்

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பூசணி விதையில் உள்ளன. பூசணி விதையில் உள்ள மக்னீசியம் உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி அளவில் துத்தநாகம் இருக்கிறது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் வராமல் தடுக்க பூசணி விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட வேண்டும்.

Recent Post