பூசணி விதைகள் தோல் நீக்கப்பட்டு, உலர்த்தப்பட்ட நிலையில் சூப்பர் மார்க்கெட்டுகளில் மிக எளிதாகக் கிடைக்கின்றன. இந்த பூசணி விதைகளை ஆண்கள் தினமும் இரண்டு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தில் நிறைய மாற்றங்கள் நடக்கும்.
பூசணி விதையில் புரதச்சத்து, ஜிங்க், மக்சீனியம், பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. பூசணி விதையில் உள்ள ஜிங்க் சத்து ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.
பூசணி விதையில் துத்தநாகம் அதிக அளவில் இருப்பதால் இது தலைமுடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
பூசணி விதையில் பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு தேவையான எனர்ஜியை தருகிறது. மேலும் உடலின் மெட்டபாலிசத்தையும் தூண்டுகிறது.
பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இதயத்தின் இயக்கம் , இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
பூசணி விதைகளில் ஒமேகா-3 அமிலம் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும். தூங்குவதற்கு முன் இதனை சாப்பிட்டால் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.