ஆன்லைனில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்… எப்படி வாங்குவது?

நீங்கள் ரயிலில் பயணிக்கப் போவதாக இருந்தாலும் சரி அல்லது ஒருவரை வழியனுப்பி வைப்பதற்காக ஸ்டேஷனுக்கு வந்தாலும் சரி. உங்களிடம் பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டாயமாக இருக்க வேண்டும். இதற்காக நாம் நீண்ட நேரம் வரிசைகளில் நின்று ஸ்டேஷன் கவுண்டர்களில் வாங்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது இதனை மிகவும் எளிதாக நாம் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.

UTS – அன்ரிசர்வ்டு டிக்கெட்டிங் சிஸ்டம்

இதனை நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதில் உங்களுடைய மொபைல் நம்பரை பயன்படுத்தி உடனடியாக பதிவு செய்யலாம்.

அப்ளிகேஷனில் உள்ள ஹோம் பேஜில் ‘பிளாட்ஃபார்ம் புக்கிங்’ ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷனை உங்களுக்கு பரிந்துரை செய்ய இந்த அப்ளிகேஷன் உங்களுடைய லொகேஷனை பயன்படுத்தும்.

நீங்கள் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்க விரும்பும் ஸ்டேஷனை தேர்வு செய்து பின்னர் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை குறிப்பிடுங்கள்.

UTS அப்ளிகேஷனில் கிரெடிட்/டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் மொபைல் வாலெட் போன்ற பல்வேறு பேமெண்ட் முறைகள் அனுமதிக்கப்படுகின்றன.

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி ஒருவர் உடனடியாக பிளாட்ஃபார்ம் டிக்கெட்களை புக்கிங் செய்யலாம்.

Recent Post

RELATED POST