ஆரஞ்சு (Orange), பச்சை (Green), மஞ்சள் (Yellow), மற்றும் ரெட் (Red) அலர்ட்களுக்கு பொதுவாக வழங்கப்படும் அர்த்தங்கள் என்ன?. இவை இயற்கை பேரழிவுகள், வானிலை மாற்றங்கள், அல்லது பாதுகாப்பு சம்மந்தமான சூழ்நிலைகளின் தீவிரத்தை குறிக்க பயன்படுகின்றன.
பச்சை அலர்ட்:
எதற்காக?
பச்சை அலர்ட் என்பது சாதாரண மழையை குறிப்பதாகும், இதில் பெரும் பாதிப்புகள் இருக்க வாய்ப்பில்லை. இது சாதாரண மழை அளவாகவே கருதப்படும்.
அளவு
ஒரு மணி நேரத்திற்கு 70 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்யும்.
பாதிப்பு
இது ஒரு சாதாரண மழையாகவே இருக்கும், எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. இதனால் இயல்பு வாழ்க்கையில் மாற்றங்கள் இருக்காது. மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது போதுமானது.
மஞ்சள் அலர்ட்:
எதற்காக?
மஞ்சள் அலர்ட் அளிக்கும் போது, மழை கனமழையாக இருக்கும் என்பதற்கான எச்சரிக்கை. இது சில இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம், ஆனால் மிகப்பெரிய பாதிப்புகள் இருக்க வாய்ப்பில்லை என்பதே ஆகும்.
அளவு
24 மணி நேரத்தில் 64.5 மில்லி மீட்டரிலிருந்து 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும்.
பாதிப்பு
மழையினால் சாலைகள் சேதமமாகி , போக்குவரத்துக்கு சிறு தடை ஏற்படலாம். மக்கள் வாகன ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும், ஏதாவது அவசர உதவி தேவைப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.
ஆரஞ்சு அலர்ட்:
எதற்காக?
ஆரஞ்சு அலர்ட் என்பது பெரிய மழைக்கு முன்னெச்சரிக்கையாக அறிவிக்கப்படும். இம்மழை பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
அளவு
24 மணி நேரத்தில் 115.6 மில்லி மீட்டரிலிருந்து 204.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும்.
பாதிப்பு
இதனால் வெள்ளம், போக்குவரத்து பிரச்சினைகள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பாதிக்கப்படும். மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நெருக்கமான இடங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும், அவசர உதவிகள் தேவையான முன்னேற்பாடுகளை செய்யவும் இது உதவுகிறது.
ரெட் (Red) அலர்ட்:
எதற்காக?
ரெட் அலர்ட் என்பது மிகப்பெரும் மற்றும் தீவிரமான மழைக்கு எச்சரிக்கையாக அறிவிக்கப்படும். இது மனித வாழ்க்கைக்கும் சொத்துகளுக்கும் மிகுந்த ஆபத்தை உண்டாக்கும்.
அளவு
24 மணி நேரத்தில் 204.5 மில்லி மீட்டர் மற்றும் அதற்கும் அதிகமான மழை பெய்யும்.
பாதிப்பு
இந்த மழையால் மிகப்பெரிய வெள்ளப் பேரழிவுகள், கட்டிடங்கள் இடிதல், சாலைகள் சேதமடைதல் போன்ற தீவிரமான விளைவுகள் ஏற்படும். இந்த சமயத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற வேண்டும், அரசாங்க நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்.