ஃபேசியல் செய்யப் போன நடிகைக்கு நடந்த விபரீதம்..!

வேலையில்லா பட்டாதாரி 2 மற்றும் பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து அனைவரது மத்தியிலும் கவனம் பெற்றவர் நடிகை ரைஸா வில்சன். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெறவே அடுத்தடுத்து ரைஸா வில்சனுக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தன. தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

tamil cinema news

தற்போது இவர் தி சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஃபேசியல் செய்வதற்காக அழகுகலை மருத்துவரிடம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுக்கலை மருத்துவர் செய்ததால் அவருடைய முகத்தின் ஒரு பக்கம் வீங்கி உள்ளது.

இதனையடுத்து அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அனால் அவர் வெளியூர் சென்று விட்டதாக கூறி அழகுக்கலை மருத்துவர் எஸ்கேப் ஆகியுள்ளார். தனக்கு நடந்த இந்த விபரீதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.