ரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

தினசரி நமது உணவில் வெள்ளைப் பூண்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்படுவது தான் ரசம், ரசத்தில் புளி ரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம் எனப் பலவகைகள் இருக்கிறது.

நோய்களை குணமாக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. வெளிநாட்டினர் தங்கள் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்து இருக்கின்றனர். ரசத்தின் மறுவடிவம் தான் சூப். ரசத்தில் சேர்க்கப்படும் அனைத்துமே உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை.

சீரகம்

ரசத்தில் சேர்க்கப்படும் சீரகம், வயிறு உப்புசம் தொண்டையில் உள்ள சளி, ஆஸ்துமா போன்றவற்றையும் குணப்படுத்துகிறது

பெருங்காயம்

ரசத்தில் சேர்க்கப்படும் பெருங்காயம், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்கிறது. புரதச் சத்து, மாவுச் சத்தும் பெருங்காயத்தில் உள்ளது. இதனால் வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. நரம்புகள் வலுவடைகிறது.

கொத்தமல்லி

ரசத்தில் சேர்க்கப்படும் கொத்தமல்லியால் சிறுநீர் நன்றாக பிரிந்து வெளியேறுகிறது. காய்ச்சலை தடுக்கிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி போன்றவை நீங்குகிறது. கண்களுக்கு பார்வைத் திறனை அதிகரிக்க செய்கிறது. கொத்தமல்லி அதிகம் சேர்த்துக் கொள்வதால் மாதவிலக்கு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

கருவேப்பிலை

கறிவேப்பிலையில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. குடல் உறுப்புகள் சிறப்பாக செயல்படும். செரிமான பிரச்சனைகளை தீர்க்கவும் கருவேப்பிலை பயன்படுகிறது, எனவே நாம் சாப்பாட்டில் ரசத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது.

Recent Post

RELATED POST