ராஸ்பெர்ரி பழத்தின் நன்மைகள்

மென்மையான சதைப்பற்று கொண்ட அரியவகை கனி தான் ராஸ்பெர்ரி பழம். இப்பழம் பார்ப்பதற்கு மாதுளை விதைகளை ஒன்றாக அடுக்கியது போல இருக்கும். ஸ்ட்ராபெரி நிறத்தை போலிருக்கும். மேலும் மேலும் சாப்பிடத் தோன்றும் அரிய வகை கனியாகும்.

ராஸ்பெர்ரி பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

வைட்டமின் பி2, பி3, பி5, பீட்டா கரோட்டின், பயோட்டின், போலிக் அமிலம், கால்சியம், தாமிரம், இரும்பு, அயோடின், மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், செலினியம், பொட்டாசியம், எல்லாஜிக் அமிலம், ப்ளாவோனாயிட்ஸ், நார்சத்து போன்ற பல்வேறு உடலுக்கு தேவையான சத்துக்கள் இப்பழத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

ராஸ்பெர்ரி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த ஒரு நோயும் அண்டாமல் ஒரு போர் வீரனை போல நம் உடலை பாதுகாக்கும்.

கொழுப்பை கரைக்கிறது

இப்பழத்தில் நார்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மேலும் இதே நார்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி தேவையில்லாமல் இருக்கும் விஷக்கிருமிகளை சுத்தப்படுத்தி வெளியேற்றிவிடுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

குடல் பாதுகாப்பு

ராஸ்பெர்ரி பழத்தில் துவர்ப்பு சுவை அதிகமாக உள்ளது. இதனால் வயிறு கோளாறு சம்பந்தமான பிரச்சனைகள், சீதபேதி போன்ற பிரச்சனைகளை இது தீர்க்கிறது. உண்ணும் உணவு நன்றாக ஜீரணம் ஆக வேண்டும், அதனை தடுக்கும் பாக்டீரியாக்கள், காளான்கள் போன்றவைகளை உடலில் உருவாகாமல் பாதுகாக்கிறது. இதனால் உணவு நன்றாக ஜீரணமாகி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

புற்றுநோயை தடுக்கும்

புற்றுநோயைத் தடுக்கும் எல்லாஜிக் அமிலம் இதில் தாராளமாக இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. குறிப்பாக வாய், தொண்டை, பெருங்குடல் போன்ற இடங்களில் உருவாகும் புற்றுநோய்களை வரவிடாமல் தடுக்கிறது. திசுக்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இந்த எல்லாஜிக் அமிலம் உடலில் ஏதேனும் புண் இருந்தால் அதனை விரைவாக குணப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது, உடலைத் தாக்கும் அனைத்து நோய்களிடம் இருந்து போராட தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு இது அதிகமாக தருகிறது.

இப்பழத்தில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இவை உடலில் வேகமாக கலந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக இதயம் சம்பந்தமான நோய்கள், மன அழுத்தம் போன்றவற்றை குணமாக்கி உடலை ஆரோக்கியத்தோடு பேணுகிறது.

ராஸ்பெர்ரி பழத்தை தினம்தோறும் எடுத்துக்கொள்வதால் திடீரென்று ஏற்படும் மாரடைப்பினை தடுக்க உதவும். இப்பழத்தினை இரவு உணவுக்கு பின் எடுத்துக்கொள்வது நல்லது.

ஒவ்வாமையை போக்கும்

சிலருக்கு வெளியில் சாப்பிடும் போது அல்லது வெந்தயம், பூண்டு போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும்போது ஒவ்வாமை ஏற்படும். அதற்கு சாப்பிட்ட பிறகு ஒரு கப் ராஸ்பெர்ரி பழம் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுவதை தடுக்கும்.

மூட்டு வலியை போக்கும்

தற்போதைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினரே மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அதற்கு தீர்வு தரும் அந்தொசையணின்ஸ் எனும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ராஸ்பெர்ரி பழத்தில் அதிகமாக இருக்கிறது. இவை உடலில் உள்ள செல்களில் தீங்கு ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. மேலும் திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவித பிரச்சனை வந்தாலும் எதிர்த்து போராடும். எரிச்சல், வீக்கம், அலர்ஜி போன்றவைகள் வராமல் தடுக்கிறது. இதனால் மூட்டுவலி ஏற்படாமல் பாதுகாக்கிறது.

கர்ப்பப்பையை பாதுகாக்கும்

ராஸ்பெர்ரி இலைகளில் பத்து எடுத்து நன்றாக தண்ணீரில் கொதிக்கவைத்து அதனை வடிகட்டி அருந்தினால் கற்பப்பை சுருங்குவதை தீர்க்கும். கர்ப்பப்பை அதன் இயல்பான நிலைக்கு வந்து ஆரோக்கியமான பிரசவம் நடக்க உதவுகிறது. மேலும் மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை போக்கி நிவாரணமளிக்கிறது.

காய்ச்சல் குறைய

கடுமையாக காய்ச்சல் இருக்கும் பொழுது ராஸ்பெர்ரி பழச்சாற்றை அருந்தினால் உடலில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பத்தைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் காய்ச்சல் குறைந்து உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

ராஸ்பெர்ரி இலை தேநீர்

ராஸ்பெர்ரி இலைகளை கிரீன் டீ போடுவது போல் செய்து குடித்து வந்தால் சீதபேதி, வயிற்றுப்புண், வயிற்று வலி போன்றவைகளே குணப்படுத்தும். மேலும் உடலில் புண்கள் இருந்தால் அதனை விரைவாக குணப்படுத்தும். ராஸ்பெர்ரி இலை டீ வடிவத்தில் ஹெல்த் ஸ்டோர்களில் கிடைக்கும். இதனை வெண்ணீரில் நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொண்டாலே போதும்.

இவ்வாறு பலதரப்பட்ட ஆரோக்கியத்தை உடலுக்குத் தரும் இப்பழத்தை தினம்தோறும் எடுத்துக்கொள்வது ஆரோக்கியம் தரும்.

Recent Post

RELATED POST