வீட்டில் எலிக்கு வைக்கப்படும் மருந்தால் பெரியவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட குழந்தைகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எலிகளைக் கொல்வதற்கு வைக்கப்படும் மருந்தில் பாஸ்பைன் என்ற வாயு வெளியேறும். இந்த வாயு ஒரு மனிதனின் நினைவை இழக்க செய்து விடும். இதை வீடுகளில் உபயோகப்படுத்தக் கூடாது. வாயுவை வெளியேற்றும் எந்தப் பொருளாக இருந்தாலும் அதை வெளிப்புறத்தில் வைக்க வேண்டும்.
மூடப்பட்ட அறைக்குள் எலி மருந்து இருந்தால், நேரம் செல்ல செல்ல அதன் வீரியம் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பாஸ்பைன் வாயுவால் நுரையீரல் அதிகம் பாதிப்படும் என்பதால் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வாயுவின் அளவைப் பொறுத்து உடலில் விஷத்தின் தன்மை மாறும். அதற்குள் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். விரைவாக, மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் பாதிப்பின் அளவை பெருமளவு குறைக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.