ரூ.10,000 கோடி சொத்தை அள்ளி கொடுத்த ரத்தன் டாடா

மும்பை: திடீர் உடல்நலக்குறைவால் கடந்த அக்டோபர் 9-ம் தேதி காலமான தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உயில் விவரங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. இந்திய தொழில்துறையின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த ரத்தன் டாடா, ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துகளை விரிவான திட்டமிடலுடன் ஒதுக்கியுள்ளார்.

ரத்தன் டாடா தனது சகோதரர் ஜிம்மி டாடாவிற்கும், தாயின் இரண்டாவது திருமணத்தில் பிறந்த சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஆகியோருக்கும் பெருமளவு சொத்துகள் அவர்களுக்கு கிடைக்கும் வகையில் உயிலில் எழுதியுள்ளார். இவர்கள் மட்டுமின்றி, டாடாவுக்கு நெருக்கமான உதவியாளர் சாந்தனு, சமையல் கலைஞர் ராஜன் ஷா, சமையல் உதவியாளர் சுப்பையா ஆகியோருக்கும் முக்கியமான சொத்துகள் வழங்கப்பட்டுள்ளன.

டாடாவுடன் 30 ஆண்டுகள் பழக்கமான ராஜன் ஷா டிட்டோவைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருக்கும் ரத்தன் டாடா, அதன் தேவைகளுக்குத் தேவையான செலவைப் பூர்த்தி செய்ய சொத்துகளை ஒதுக்கியுள்ளார்.

மேலும், சாந்தனுவின் வெளிநாட்டுப் படிப்புக்காக டாடா நிறுவனம் வழங்கிய கடனை ரத்தன் டாடா முழுமையாக தள்ளுபடி செய்துள்ளார்.

ரத்தன் டாடாவின் சொத்துப் பட்டியலில் மும்பை ஜுகுதாரா சாலையில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, அலிபாக்கில் கடற்கரையோரத்தில் 2,000 சதுர அடியில் அமைந்துள்ள ஒரு பிரமாண்ட பங்களா, 350 கோடி மதிப்புள்ள வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தில் 0.83 சதவீத பங்குகள் அடங்குகின்றன. அவரது பங்குகள் அனைத்தும் ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளைக்கு வழங்கப்படவுள்ளதாகவும், டாடா குழுமத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க இந்த பங்குகள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருக்கின்ற சொத்துகள் மாறினாலும், மனித நேயம் மற்றும் தன்னலமற்ற பண்பு கொண்ட ரத்தன் டாடாவின் நினைவு, இந்திய தொழில்துறையில் என்றும் நிலைத்திருக்கும்!

Recent Post

RELATED POST