புத்தகத்தை படுத்துக்கொண்டே படிப்பது கண்களுக்கு நல்லதா?

நாம் ஒரு பொருளை பார்க்கும்போது நம் கண்களின் ஒளிபொருளின் மீது பிரதிபலிக்கிறது. இதன்காரணமாக அந்தப்பொருளின் பிம்பமானது நம் கண்களில் உள்ள விழித்திரையில் விழுகிறது. 

விழித்திரையில் விழுந்த பிம்பம்தான் நாம் பொருளை பார்ப்பதை உணர வைக்கிறது. அதாவது பொருளை நம் கண்களில் தெரியவைக்கிறது. இவ்வாறு பொருள் நேரடியாக விழித்திரையின் விழாவிட்டால் பொருட்கள் கண்களுக்குத் தெரியாது.
 
இதனால் சில சமயங்களில் நம் கண்களில் உள்ள தசைகள் சுருங்கி பிம்பத்தை விழித்திரையில் விழும்படி செய்கின்றது. இவ்வாறு கண்களைச் சுருங்கி விரித்து பிம்பத்தைப் பார்ப்பதன் மூலம் கண்களுக்கு வலி ஏற்படுகிறது.
 
நாம் புத்தகத்தை படுத்துக்கொண்டு படிக்கும் போது புத்தகம் நம் கண்களுக்கு வெகு அருகில் இருக்கும். இதனால் நம் கண்களில் உள்ள தசைகள் இடைவிடாது சுருங்கி விரிவடைகின்றன. 
 
நாம் படுத்துக்கொண்டு படிக்கும்போது புத்தகத்தை தேவையான அளவு சம தூரத்தில் பிடித்துக்கொண்டு இருக்க முடியாது. வரிகளில் உள்ள எழுத்துக்களை உற்றுப் பார்த்து படிக்கும்போது அதிக அளவில் கண்களின் தசைகள் வேலை செய்கிறது. இதனால் கண்களில் பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
 
தொடர்ந்து கண்களின் தசைகள் மிக அதிக அளவில் சுருங்கி விரிந்து வேலை செய்தால் கண்களின் பார்வை கூட மங்கி போய்விட வாய்ப்பு உள்ளது. இதனால் படுத்துக்கொண்டு படிப்பது நல்லதல்ல. உட்கார்ந்து கொண்டு படிப்பதே நல்லது.

Recent Post