உடலுக்கு தேவையான சத்துக்களில் முக்கியமான ஒன்று வைட்டமின் சி. இந்த சத்து தான், நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கும். வைட்டமின் சி யை அதிக அளவில் தரும் உணவுப்பொருட்களில் ஒன்று சிவப்பு மிளகாய். இதில், ஒளிந்திருக்கும் நன்மைகள் மற்றும் பலருக்கும் தெரியாத தகவல்களை பற்றி பார்ப்போம்.
பொதுவாக ஆரஞ்சு பழத்தில் தான் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால், சிவப்பு மிளகாய், ஆரஞ்சு பழத்தையே வென்றுவிடுகிறது. அதாவது, ஆரஞ்சு பழத்தை விட 3 மடங்கு அதிகமாக, வைட்டமின் சி சத்து, சிவப்பு மிளகாயில் உள்ளது. இதோடு சேர்த்து, வைட்டமின் ஏ, பி, ஈ, கே , தாமிரம், பொட்டாசியம் போன்ற இதர சத்துக்களும் உள்ளன.
இன்றைய நாட்களில், புற்றுநோய் சர்வசாதாரணமாக அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இந்த புற்றுநோயை தடுப்பதற்கு தேவையான மூலக்கூறு, சிவப்பு மிளகாயில் இருப்பதாக சில ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல், கணையம், லுகேமியா போன்ற 40 வகையான புற்றுநோயுடன் தொடர்புடைய அணுக்களை அழிக்க இது உதவுவதாக கூறப்படுகிறது.
ஒற்றைத் தலைவலி மற்றும் அதனால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது, சளிக்கான அறிகுறிகளைக் குறைகிறது, மேலும் உங்கள் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவுகிறது.
உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தும் மசாலா பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்று இந்த சிவப்பு மிளகாய் தான். உடல் எடையை குறைப்பதற்கும், இந்த உணவுப் பொருள் பயன்படும் என்று கூறப்படுகிறது.
உணவுகள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு சில ரசாயண பொருட்களை பலர் பயன்படுத்துக்கின்றனர். ஆனால், சிவப்பு மிளகாய் என்பது ஒரு இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பியாகும். இதனை உணவில் பயன்படுத்தினால், உணவில் ஏதேனும் சிறிய நுண்ணயிரிகள் இருந்தால், அது அவற்றை கொன்று விடும்.
ஆரோக்கியமான உணவே, ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம். அதனை நினைவில் கொண்டு, சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.