பச்சை நிற இளநீரை விட செவ்விளநீர் சற்று விலை அதிகம். அதற்குக் காரணம் பச்சை இளநீர் கிடைக்கும் அளவிற்கு சிவப்பு இளநீர் கிடைப்பதில்லை. பச்சை இளநீரை விட சிவப்பு இளநீரில் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
சித்த மருத்துவத்தில் இளநீருக்கு மிக முக்கிய இடமுண்டு. பச்சை நிற இளநீரைக் காட்டிலும் சிவப்பு நிற இளநீர் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
சிவப்பு இளநீரில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச் சத்து, காப்பர், கந்தகச் சத்து, மக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். அதிலும் சிவப்பு நிற தேங்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கூடுதல் ஊட்டச்சத்து கொண்டது.
செவ்விளநீர் குடிப்பதால் இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் கட்டுப்படுத்தப்படும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
செவ்விளநீர் குடிப்பதால் சருமம் மென்மையாக இருக்கும். முகம் பொலிவு பெறும். சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசை நீங்கும்.
செவ்விளநீர் சிறுநீரகப் பாதைகளில் ஏற்படும் தொற்றை சரிசெய்யும். உடல் சூட்டை குறைக்கும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 250 – 300 ML இளநீர் அருந்தலாம். அளவுக்கு மீறி குடித்தால் உடலில் பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கும்.
இளநீரை அருந்தும்போது வெறும் நீரை மட்டும் குடிக்காமல் அதன் வழுக்கையையும் சேர்த்து உண்ண வேண்டும். அப்போதுதான் இளநீரின் சத்து முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.