சிவப்பு அரிசியில் உள்ள நன்மைகள் என்ன?

சிவப்பு அரிசி என்பது ஓர் அற்புதமான அரிய உணவு.”பிரவுன் ரைஸ்” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சிவப்பு அரிசியில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. இதிலுள்ள சத்துக்கள் நீக்கி பலமுறை தீட்டப்பட்ட பிறகு நமக்குக் கிடைக்கின்ற அரிசிதான் நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி.

சிவப்பு அரிசியில் உள்ள சத்துக்கள்

சிவப்பு அரிசியில் மாங்கனீஸ், மக்னீசியம், செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் உள்ளது, இதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தானிய வகைகளில் சிவப்பு அரிசியில் மட்டும்தான் வைட்டமின் ஈ உள்ளது. சிவப்பு அரிசியில் நார்ச் சத்தும் மாவுச் சத்தும் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பாதுகாத்துக்கொள்ளும்.

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இதில் உள்ள தாது உப்புக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் நன்கு வளர்ச்சி அடையும். வாய்ப் புண்கள் குணமாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளை அரிசியைவிட சிவப்பு அரிசி சாப்பிடுவது பல மடங்கு நல்லது

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி

சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.

Recent Post

RELATED POST