கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு கால் வீக்கம் வருவது சகஜமான ஒரு விஷயம்தான். அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது பற்றி பார்ப்போம்.

கர்ப்பக்காலத்தில் இருக்கையில் உட்காரும் பொழுது கால்களை ஒரு சிறிய முக்காலியின் மீது கால் வைத்து உட்கார வேண்டும்.

படுக்கையில் தலையணையை தொடைகளுக்கு கிழே ஒன்றும், முழங்கால் மற்றும் குதிங்காலுக்கு ஒன்றும் வைத்து கொள்ள வேண்டும்.

நேராக நிற்கும் பொழுது இடம் மற்றும் வலது கால் பெருவிரலால் தரையில் மாற்றி மாற்றி வட்டங்கள் இட வேண்டும்.

நடைப் பயிற்சியும், மிதமான உடற்பயிற்சியும் செய்தால் கூடுதலான நீரை சுழலச் செய்யும்.

அளவு குறைந்த குதிகால் உயரமுடைய தாராளமான செருப்புகளை உபயோகப்படுத்த வேண்டும்.

உப்பு சேர்த்து கொள்வதை குறைத்து கொள்ள வேண்டும். உப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். சிறுநீர் அதிகமாக போகவைக்கக் கூடிய மருந்துக்களை சாப்பிடக் கூடாது. வீக்கம் அதிகமாக இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

Recent Post

RELATED POST