இன்றைய காலத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் அந்த சிறுநீரகக் கல் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அதனை சரி செய்ய வேண்டும்.
அதிலும் கற்களின் அளவு 5 மிமி குறைவாக இருந்தால் அதனை கண்டிப்பாக வீட்டில் இருக்கும் ஒரு சில உணவுகளின் மூலமே சரி செய்துவிடலாம். இல்லையென்றால் லாப்ரோஸ்கோப்பி என்ற சிகிச்சையின் மூலமே நீக்க முடியும்.
சிலருக்கு அந்த கற்களின் காரணமாக வயிற்றில் அடிக்கடி வலியானது ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக அதனை கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.அவ்வாறு அதனை ஈஸியாக வீட்டில் இருக்கும் ஒருசில உணவுகளை வைத்து கரைக்கலாம்.
தண்ணீர்
அனைவருக்குமே சிறுநீரகக்கல் போதிய தண்ணீரானது உடலில் இல்லாத காரணத்தினாலே வருகிறதென்று நன்கு தெரியும். ஆகவே எப்போது கற்கள் உடலில் இருக்கிறதென்று தெரிகிறதோ, அன்றிலிருந்து ஒரு நாளைக்கு 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க ஆரம்பிக்க வேண்டும். இதுவே ஒரு சிறந்த எளிதான வழியாகும்.
வெந்தய தண்ணீர்
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீரகக்கற்கள் கரைவதோடு மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் டாக்ஸின்களும் வெளியேறுகின்றன.
டால் மிஸ்ரி
இது ஒரு புதுவிதமான படிகமாக்கப்பட்ட சர்க்கரை கட்டிகள். இந்த சர்க்கரைக் கட்டிகள் பனை மரத்திலிருந்து செய்யப்படுகிறது. இந்த பொருள் கிடைப்பது சற்று கடினம் தான். ஆனால் அதன் பலன் மிகவும் உயர்ந்தது.
இது சிறுநீரகக்கற்களை கரைக்கும் ஒரு சிறந்த பொருள். ஆகவே அதனை இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை குடிக்க வேண்டும். முக்கியமாக அந்த கட்டிகள் தண்ணீரில் நன்கு கரைந்திருக்க வேண்டும்.
வாழைத்தண்டு
சமையலில் பயன்படும் வாழைத்தண்டுகளை வாரத்திற்கு ஒரு முறை சமைத்து உண்டால், சிறுநீரகக்கற்கள் வராமல் இருக்கும். அதுவே கற்கள் இருப்பவர்கள், அதனை தினமும் ஜூஸ் போட்டு குடித்தால், கற்கள் விரைவில் கரைந்துவிடும். ஏனெனில் அதில் அதிகமான அளவு நார்ச்சத்தானது இருக்கிறது. மேலும் அதில் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது.
கொத்தமல்லி இலைகள்:
கொத்தமல்லி ஒரு சிறந்த மூலிகைப் செடி. இதில் பல வித நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த கொத்தமல்லியை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம்
காய்கறிகளை வேகவைத்து தண்ணீரை வடிகட்டிய பின்னர் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மிகச்சிறிய அளவில் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
கடுக்காய், அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.
கருவேப்பிலையை பொடி செய்து தினமும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும். சிறுநீரகம் பழுதடைவதும் தடுக்கப்படும்.
காசினி கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கல் கரையும்.
கீழாநெல்லி இலைச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு சரியாகும்.
சாணாக்கி கீரையை கஷாயம் வைத்துக் குடித்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.
சோம்பு, பார்லி, மஞ்சள் மூன்றையும் ஒன்றாக சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் நல்லது.
டர்னிப் கீரையுடன் சீரகம், சோம்பு, சதகுப்பைக் கீரை, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் சிறுநீரக நோய்த்தொற்று குணமாகும்.
எனவே சிறுநீரகக் கற்களை நீண்ட நாட்கள் வைத்து, அதனால் அறுவை சிகிச்சை செய்யுமளவு கொண்டு செல்லாமல், வீட்டிலேயே தினமும் அதற்கான உணவுகளை சரியாக உண்டு வந்தாலே, கற்கள் கரைந்துவிடும்.