இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும்…வெளியான கட்டுப்பாடுகள்

வரும் அக்டோபர் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை பொது மக்கள் பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் அரசு தரப்பில் கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, காலை 6- 7 மணி மற்றும் இரவு 7 – 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குடிசை பதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களு்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Recent Post

RELATED POST