பூண்டில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதனை நாம் உணவில் சேர்த்துக்கொள்வதால் பல உடல்நலப் பிரச்சனைகள் நீங்கும். அந்த வகையில் வறுத்த பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பூண்டில் உள்ள மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்களால் ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் மேம்படும்.
Also Read : கடுமையான நெஞ்சுசளியை நீக்கும் பூண்டு பால்
வறுத்த பூண்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது. இதனால் இதய நோய்களை உருவாக்கும் வாய்ப்புகள் குறையும்.
வறுத்த பூண்டு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால் உயர் இரத்த அழுத்தம் உள்ள ஆண்களும் இதனை சாப்பிடலாம்.
பூண்டில் செலினியம் மற்றும் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளன, இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது.
வறுத்த பூண்டை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இவை இரண்டும் தொற்றுநோய்களை எதிர்த்து போராடும்.
வறுத்த பூண்டு பற்களை எப்படி சாப்பிடுவது?
முதலில் பூண்டு பற்களின் தோலை நீக்கவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு பல் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதை ஒரு தட்டில் போட்டு ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.