சருமத்தை பாதுகாக்கும் ரோஸ் வாட்டரை எப்படி பயன்படுத்துவது?

கோடைக்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை சரிசெய்ய ரோஸ் வாட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இதில் பார்ப்போம்.

ரோஸ் வாட்டரில் கிருமி நாசினி பண்புகளும் உள்ளன. இது தவிர பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோடை காலத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக உடலில் நீர்சத்து குறையும். இதனால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். சரும எரிச்சல், தடிப்புகள் போன்ற பிரச்சனைகள் உருவாகும். இந்த பிரச்சினைகளுக்கு ரோஸ்வாட்டர் நல்ல தீர்வு தரும்.

ரோஜா இதழ்களை நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரில் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பாதுகாக்கும்.

காட்டன் பஞ்சுவில் ரோஸ் வாட்டரை நனைத்து கண்களின் புருவம், அடிப் பகுதியில் தடவுவதன் மூலம் கண் சோர்வை போக்கலாம்.

ரோஸ் வாட்டர் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. சரும எரிச்சல், சருமத் தடிப்புகள், கண்கள் சிவத்தல், வீக்கம் அடைதல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும். ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுவதன் மூலம் சரும செல்கள் வலுப்பெறும்.

சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசைத்தன்மையை கட்டுப்படுத்தி சருமத்தின் பி.எச். சமநிலையை பராமரிக்கவும் ரோஸ் வாட்டர் உதவும். வெட்டு காயங்கள், வடுக்கள், தீக்காயங்கள் போன்ற பிற காயங் களுக்கு சிகிச்சை அளிக்க ரோஸ் வாட்டர் உதவுகிறது.

ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் கிராம்பு தூள், ஒரு ஸ்பூன் ரோஸிவ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில தடவ வேண்டும். மறுநாள் காலை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள். இவ்வாறு வாரத்திற்கு இரண்டுமுறை செய்துவந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும்.

தினமும் குளிக்கும்போது தண்ணீரில் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து குளித்து வந்தால் சருமத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கும். வரட்சியான சருமம் உள்ளவர்கள் அந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தினால், நல்ல மிருதுவான சருமத்தை பெறலாம்.

Recent Post