ராஜமெளலியின் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் பிரம்மாண்டமான மேக்கிங் வீடியோ வெளியானது

ராம்சரண், அஜய் தேவ்கன், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் நடிப்பில் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் பிரம்மாண்டமான மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.