ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

ருத்ராட்சத்தை அணிவதன் மூலம் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதை நீங்கள் உணர முடியும். இமாலய பகுதியை சேர்ந்த ஒரு சில உயர்ந்த மலைப் பகுதிகளில் வளரும் குறிப்பிட்ட மரங்களின் விதைதான் ருத்ராட்சம். ருத்ராட்சம் என்பது சித்தர்கள் கண்டறிந்த ஒரு மகத்தான மூலிகையாகும். இது நம் உடலோடு ஒட்டி இருக்கும் போது கிருமிகளை அழித்து உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு மன தைரியத்தையும் தருகிறது. எதிர்மறை சக்திகளை அழிக்கும் திறன் உள்ளது. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். குழந்தைகள் இதை அணிவதால் அவர்கள் படிப்புக்கு தேவையான மனதை ஒருநிலைப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும். ருத்ராட்சை அணிவதால் மனது தூய்மை பெறுகிறது.

ஒரு செயலை செய்வதற்கு தேவையான அறிவும் ஆற்றலும் தருகிறது. ருத்ராட்சம் அணிந்து கொண்டு குளிப்பதால் நம் உடலில் படும் நீர் கங்கை நீருக்கு ஈடாக பார்க்கப்படுகிறது. ருத்ராட்ச மணிகளை கோர்க்கும் பொழுது பட்டுநூலோ அல்லது பஞ்சுநூல் கொண்டோ கோர்ப்பது சிறந்தது. நூலில் கோர்த்த மாலை என்றால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை நூலை மாற்றுவது நல்லது, இல்லையென்றால் நூல் ஒரு நாள் அறுந்து உங்கள் 108 மணிகளும் ஒவ்வொரு பக்கம் உருள வாய்ப்பு உண்டு.

ருத்ராட்சத்தில் பல்வேறு முகங்கள் இருக்கும். அதில் எந்த ராசி நட்சத்திரத்திற்கு எந்த முகம் அமைந்துள்ள ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம்.

அஸ்வினிஒன்பது முகம்
பரணிஆறுமுகம், பதிமூன்று முகம்
கார்த்திகைபனிரெண்டு முகம்
ரோகிணிஇரண்டு முகம்
மிருக சீரிஷம்மூன்று முகம்
திருவாதிரைஎட்டு முகம்
புனர்பூசம்ஐந்து முகம்
பூசம்ஏழு முகம்
ஆயில்யம்நான்கு முகம்
மகம்ஒன்பது முகம்
பூரம்ஆறுமுகம், பதிமூன்று முகம்
உத்திரம்பனிரெண்டு முகம்
ஹஸ்தம்இரண்டு முகம்
சித்திரைமூன்று முகம்
சுவாதிஎட்டு முகம்
விசாகம்ஐந்து முகம்
அனுஷம்ஏழு முகம்
கேட்டைநான்கு முகம்
மூலம்ஒன்பது முகம்
பூராடம்ஆறுமுகம், பதிமூன்று முகம்
உத்திராடம்பனிரெண்டு முகம்
திருவோணம்இரண்டு முகம்
அவிட்டம்மூன்று முகம்
சதயம்எட்டு முகம்
பூரட்டாதிஐந்து முகம்
உத்திரட்டாதிஏழு முகம்
ரேவதிநான்கு முகம்

Recent Post

RELATED POST