சாய்பாபாவுக்கு எப்படி விரதம் இருப்பது? அதன் நன்மைகள் என்ன?

வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சாய்பாபாவுக்கு பெரும்பாலானோர் விரதம் இருந்து வருகின்றனர்.

விரதம் இருக்கும் போது 9 வாரங்கள் வியாழக்கிழமை அன்று சாய்பாபாவின் நாமத்தை மனதில் எண்ணி தாங்கள் நினைக்கும் காரியத்தை நினைவுகூர்ந்து தூய எண்ணங்களுடன் வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டால் உங்களின் வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

சுத்தமான ஒரு பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு சந்தனம், குங்குமம் மற்றும் திலகமிட வேண்டும்.

ஊதுபத்தி ஏற்றிய பிறகு பாபாவின் விரத கதையைப் படிக்கலாம். பூஜையின்போது கற்கண்டு, இனிப்பு பழங்கள் என சாய் பாபாவிற்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபட்டால் எண்ணிய காரியம் விரைவில் நடக்கும். பாபாவிற்கு பிடித்த மஞ்சள் நிற மலர்களை அணிவித்தல் மிகவும் சிறப்பு. விரததத்தை ஆண், பெண், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

Recent Post