சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை பூர்விகமாக கொண்ட இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பயிர் செய்யப்பட்டு வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கிழங்கை சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க சர்க்கரைவள்ளி கிழங்கை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

100 கிராம் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் 70 முதல் 90 சதவீதம் கலோரி உள்ளது. கொழுப்பு அளவு மிக குறைவாக உள்ளது. மேலும் சக்கரவள்ளி கிழங்கில் நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை உள்ளன.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது. இது ரத்த அழுத்தத்தை சீராக்கும். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

மற்ற கிழங்கு வகைகளைவிட சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. இதனால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மேலும் சருமம் ஆரோக்கியம் பெரும்.நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படும்.

சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். மேலும் குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி குடல் புற்றுநோய் வர விடாமல் பாதுகாத்துக் கொள்ளும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்து வருவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும். குறிப்பாக பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் கரு வளர்ச்சிக்கு மிக பயனுள்ளதாக அமையும்.

Recent Post

RELATED POST